Latest News :

லொஸ்லியா காதலுக்கு சேரன் தடை போட இது தான் காரணம்! - உண்மையை சொன்ன நடிகை
Wednesday September-11 2019

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் கவின், தர்ஷன், ஷெரின், வனிதா, முகேன், சாண்டி ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் இருந்து அநேகமாக ஷெரின் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது. அதே சமயம், தற்போது சீக்ரெட் ரூமில் இருக்கும் சேரன், இறுதியான மூன்று போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்றும் தகவல் கசிந்திருக்கிறது.

 

இதற்கிடையே, நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில், லொஸ்லியா, கவின் இடையிலான காதலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கவினும் லொஸ்லியாவை விடாமல் இங்கேயே காதலை கன்பார்ம் பண்ண வேண்டும், என்று கூறுகிறார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேரன், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது, போட்டியில் கவனம் செலுத்துங்கள் வெளியே வந்ததும் மற்றதை பார்த்துக் கொள்ளலாம், என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், சேரனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காத கவின், லொஸ்லியாவிடம் தொடர்ந்து காதல் குறித்து பேசி வருகிறார். இதை சீக்ரெட் ரூமில் இருந்து கவனித்த சேரன், கடிதம் மூலம் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் எழுப்பிய கேள்வியில், கவினின் காதல் விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், சேரனின் இந்த செயலை விமர்சித்திருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல், சேரனுக்கு லொஸ்லியா மீது பாசம் இல்லை, கவின் மீது கடுப்புல இருக்கிறார். அதனால், தான் அவர் லொஸ்லியா, கவின் காதலுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார், என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அவரது பதிவுக்கு கமெண்ட் போடும் ரசிகர்களும், சேரன் லொஸ்லியா மீது வைத்திருப்பது பாசமில்லை, என்று கூறி வருகிறார்கள்.

Related News

5603

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரைபயணத்தை தொடங்குகிறார் அபாஸ்!
Friday July-25 2025

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...

‘கேப்டன் பிரபாகரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday July-25 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

’சக்தித் திருமகன்’ படம் மூலம் அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி!
Friday July-25 2025

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...

Recent Gallery