அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இசை வெளீயீட்டு விழா மிகப்பெரிய அளவில் சென்னையில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்திற்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜயின் 64 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு, அவரது 65 வது படத்தை இயக்குநர் பேரரசு இயக்க இருப்பதாகவும், மேலும் விஜயை வைத்து ‘திருமலை’ மற்றும் ‘ஆதி’ ஆகிய படங்களை இயக்கிய ரமணா படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், பிரபல நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் இயக்குநர் ரமணா, ”இது தவறான தகவல், நான் தினத்தந்தி நாளிதழிடமோ அல்லது நிருபரிடமோ இதுபோல எந்த தகவலையும் கூறவில்லை. மேலும், வேறு எந்த ஊடகத்திலும் இப்படி ஒரு தகவலை நான் பதிவிடவில்லை. அப்படி இருந்தும், என் மீது தனிப்பட்ட நலன் கொண்ட தினத்தந்தி இப்படி ஒரு தவறான செய்தியை வெளியிட்டுவிட்டது.
இதனால், தளபதி விஜய்க்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கும் என்பதை நான் உணர்வேன். நான் படம் இயக்கும் முயற்சியில் இருப்பது உண்மை தான். ஆனால், அது விஜயை வைத்து அல்ல. அப்படி, காலமும், இயற்கையில் வழிவகை செய்தால், அதை நானே சொல்லியிருப்பேன்.” என்று வருத்தத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...