Latest News :

சேரன் பாசத்தை உலகிற்கு புரிய வைத்த லொஸ்லியாவின் அப்பா!
Wednesday September-11 2019

முதல் இரண்டு சீசன்களில் இல்லாத நாடக தன்மையும், நடிப்பும் மூன்றாவது சீசன் பிக் பாஸில் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வரும் நிலையில், லொஸ்லியா மற்றும் கவின் இடையிலான காதல் அதை உறுதி செய்யும் விதத்தில் இருந்தது. அதிலும், கவின், பார்க்கும் பெண்களை எல்லாம் ஆரம்பத்தில் காதலித்து பிறகு இறுதியாக லொஸ்லியாவை தனது காதல் வலையில் விழ வைத்திருக்கிறார். இதனை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வந்த சேரன், லொஸ்லியாவை தனது மகள் போல நினைத்ததால் என்னவோ, யார் என்ன சொன்னாலும், கவினிடம் இருந்து லொஸ்லியாவை காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தார்.

 

அவர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கூட, லொஸ்லியாவை கவினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால், சில ரசிகர்கள் அவருக்கு கவின் மீது கடுப்பு, என்று கூறினார்கள். பிக் பாஸ் போட்டியின் முன்னாள் போட்டியாளரான காஜல் கூட சேரனை கலாய்த்து ட்விட்டர் பதிவி ஒன்றை வெளியிட்டார்.

 

ஆனால், சேரனின் மகள் பாசம் நிஜம் என்பதை, இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த லொஸ்லியாவின் தந்தை உலகிற்கு புரிய வைத்துவிட்டார். காதல் மன்னனான கவினின் காதல் கதைகள் ஏராளமாக இருக்கிறது. பார்க்கும் பெண்களுக்கு எல்லாம் காதல் அம்பு விடும் கவினால் தன் மகளின் எதிர்காலம் பாதித்துவிடுமோ, என்ற பரிதவிப்பில் லொஸ்லியாவின் தந்தை கோபப்பட்டதோடு, தனது கண்களில் இருந்து வெளியே வர காத்திருந்த கண்ணீரை கஷ்ட்டப்பட்டு அடக்கிக்கொண்டு, மகளை எச்சரித்தார்.

 

Loslya Father

 

லொஸ்லியாவின் சொந்த அப்பா இதை செய்தது பெரிய விஷமல்ல, இந்த நிக்ழ்ச்சியில் அறிமுகமாகி, தனது இரண்டு மகள் இருக்கிறார்கள், என்ற எண்ணத்தில் அவர்களுடைய வயதுடைய லொஸ்லியாவையும் தனது மகளாக நினைத்து, அவரது வாழ்க்கை வீணாக கூடாது என்று சேரன் காட்டிய அக்கறை பற்றி இன்று அனைத்து மக்களும் புரிந்துக்கொண்டிருப்பார்கள்.

 

அப்பாவின் அன்பு மகளாக மட்டும் லொஸ்லியாவை சேரன் பார்த்திருக்க மாட்டார், பல இன்னல்களை எதிர்கொண்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் எத்தனையோ ஈழப் பெண்களுக்கான நம்பிக்கையாகவே அவரை பார்த்திருப்பார். அதனால் தான்,  யார் என்ன சொன்னாலும், வார்த்தையால் எப்படி அவமானப்படுத்தினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை மகளாக பாவித்து அவருக்காக தொடர்ந்து பாசப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த போராட்டத்திற்கான வெற்றி அவருக்கு இன்று கிடைத்துவிட்டது.

 

Cheran and Loslya Father


Related News

5607

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரைபயணத்தை தொடங்குகிறார் அபாஸ்!
Friday July-25 2025

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...

‘கேப்டன் பிரபாகரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday July-25 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

’சக்தித் திருமகன்’ படம் மூலம் அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி!
Friday July-25 2025

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...

Recent Gallery