சிம்புக்காக இங்கு பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். படம் கொடுப்பதற்காக அல்ல, கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் திருப்பி கேட்பதற்காக. இது சிம்பு வாழ்க்கையில் பல முறை நடந்திருந்தாலும், இந்த முறை சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்துவிட்டதால், கடந்த முறை போல சிம்புவால் எஸ்கேப் ஆக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சிம்பு செய்த குறும்புத்தனத்தை பொருத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்களுக்கு, இனி பொருத்தால் வேலைக்கு ஆகாது, என்பதை ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது படத்தில் இருந்து அவரை நீக்கி மற்ற தயாரிப்பாளர்களுக்கு புரிய வைத்ததை தொடர்ந்து, அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தக்க இழப்பீடு பெற்றே தீருவோம், என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால், தயாரிப்பாளர்களின் புகார்களோடு தயாரிப்பாளர் சங்கத்தினர் காத்துக்கொண்டிருக்க இந்த விஷயத்தை சிம்புவின் நண்பர்கள் அவர் காதில் போட்டுள்ளார்கள். இதனால், இம்மாதம் 5 ஆம் தேதி சென்னைக்கு ரிட்டர்ன் ஆக இருந்த சிம்பு, அதை 10 ஆம் தேதியாக மற்றி, தற்போது அதையும் மாற்றி 20 ஆம் தேதி வருவதாக தகவலை கசியவிட்டிருக்கிறார்.
ஆனால், அவர் 20 ஆம் தேதி வந்தாலும், இனி அவரால் படம் நடிக்க முடியாத அளவுக்கு அவர் மீது தயாரிப்பாளர்கள் பெரும் கோபத்தில் இருப்பதால், சிம்பு இனி தாய்லாந்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, என்றும் பேச்சு அடிபடுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...