’விஸ்வாசம்’ பாதையில் ‘தபாங் 3’!
Thursday September-12 2019

அஜித் படங்களில் மிகப்பெரிய வசூலை ஈட்டிய படங்கள் வரிசையில் ‘விஸ்வாசம்’ முதலிடத்தை பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். தமிழகம் முழுவதும் ரூ.120 கோடியை இப்படம் வசூலித்திருக்கிறது. ஆனால், இது தவறான தகவல், என்று சமீபத்தில் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளரும் கூறினார். 

 

இதற்உ மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் பதிலடி கொடுத் ‘விஸ்வாசம்’ படத்தை ரிலீஸ் செய்த கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ், பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் குறித்து பேசிங்கள், எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசத்தின் சாதனையை முறியடிக்க முடியாது, மறக்கவும் முடியாது, என்று தெரிவித்தார்.

 

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், தற்போது சல்மான்கான் ரசிகர்களையும் கோட்டபாடி ஜே.ராஜேஷ் குஷிப்படுத்தும் விதமாக, ‘விஸ்வாசம்’ வழியில் ‘தபாங் 3’ படத்தையும் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறார்.

 

பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தபாங் 3’ வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பை வெளியிடும் கோட்டபாடி ஜே.ராஜேஷ், 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதால், ‘விஸ்வாசம்’ போல ‘தபாங் 3’ யும் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

5615

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery