கவினுக்கு அடி உதை! - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு
Friday September-13 2019

பிக் பாஸில் கடந்த சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்பத்தார் விசிடடித்து வருகிறார்கள். இதில், தர்ஷன், முகேன், வனிதா ஆகியோரது குடும்ப உறுப்பினர்கள் வந்தது சாதரணமாக இருந்தாலும், லொஸ்லியாவின் குடும்பத்தாரின் எண்ட்ரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

லொஸ்லியாவின் தந்தை அவரது காதல் குறித்து கடுமையாக பேசியதால் கவின் கண்ணீர் விட்டதோடு, அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டனர். இதற்கிடையே, கவினின் அம்மா கைதான விஷயத்தை அறிந்த கவின், மேலும் சோகமடைந்ததோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முடிவு எடுத்தார். ஆனால், அவரை வெளியேற விடாமல் சக போட்டியாளர்கள் தடுத்துள்ளார்கள்.

 

இந்த நிலையில், கவினை பார்க்க அவரது குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டுக்குள் வராத நிலையில், அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வந்திருக்கிறார். கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்திய அவர், கவினின் முடிவை கண்டிக்கவும் செய்திருக்கிறார்.

 

இத்துடன் இல்லாமல், கவினை கண்ணத்தில் பளார் என்று அரைந்து, பிக் பாஸ் டைடிலை ஜெயித்துவிட்டு வா, என்றும் கூறியுள்ளார். அதே சமயம், கவின் பிக் பாஸ் டைடிலை ஜெயித்தால், இப்போது அவர் அடித்தது போல கவினும் அவரை மேடையில் வைத்து அடிக்கலாம், என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related News

5616

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery