பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்! - உறுதியான தகவல் இதோ
Sunday September-15 2019

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இன்று ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி பிறகு சீக்ரெட் ரூம் மூலம் மீண்டும் போட்டியில் இருப்பதால், இந்த முறை நிச்சயம் ஒருவர் வெளியே செல்வது உறுதியானது.

 

இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் வனிதா, கவின், லொஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

 

இந்த பட்டியலில் இருப்பவர்களில் யார் வெளியேறப் போவது என்பதி ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களாக வனிதா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார், என்று கூறப்பட்டது.

 

அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஏற்கனவே ஒரு முறை தனது சொந்த பிரச்சினைகளுக்காக வெளியேறிய வனிதா, மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக எண்ட்ரியாக தனது அதிரடி ஆட்டத்தை விளையாடி வந்த நிலையில், அவரது ஆட்டம் சற்று ஓவரனாதால் ரசிகர்கள் மட்டும் இன்றி பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவும் அவர் மீது அதிருப்தியடைந்தது.

 

இதன் காரணமாகவும், ரசிகர்களின் வாக்கு காரணமாகவும் வனிதா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். அவர் வெளியேறிய எப்பிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

Related News

5619

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery