விவேகம் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தால் அஜித்துக்கு வலி அதிகமானதாகவும் அதனால், அவரது தோள் பட்டையில் அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், சில மாதங்களுக்கு பிறகே தனது அடுத்த படத்தில் வேலையில் அவர் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், அஜித்துக்கு மீண்டும் ஒரு ஆபரேஷ செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆபரேஷனுக்கு பிறகு குறைந்தது 5 மாதங்களாவது அஜித் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம். இதனால், அஜித் தனது அடுத்த படம் குறித்டு அடுத்த வருடமே முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், தற்போது வைரலாக பரவி வருகிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...