தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பட்டங்களுடன் வலம் வரும் நயன்தாரா, எந்த ஒரு பகட்டு விஷயங்களையும் பின்பற்றாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். விளம்பரங்களில் அதிகம் தோன்றவில்லை என்றாலும், தான் இருக்கும் சினிமா தொழிலையும் அதில் ஈடுபட்டிருக்கும் பிற தொழிலாளர்களையும் அதிகம் மதிக்க கூடியவர்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்த உடன், அதில் வேலை செய்த ஊழியர்களுக்கு உதவி செய்வது, தனது முன்னாள் மேனேஜருக்கு கார் பரிசளித்தது என ஏதாவது ஒரு வகையில் தன்னை சுற்றியிருப்பவர்களுக்கு நல்லது செய்து கொண்டிருப்பார்.
அந்த வகையில், இயக்குநரும் தனது காதலருமான விக்னேஷ் சிவனின் மேனேஜரை நயன்தாரா தயாரிப்பாளராக்கியிருக்கிறார்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து தயாரிக்கும் படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தின் மூலம் தான் விக்னேஷ் சிவனின் மேனேஜர் கே.எஸ்.மயில்வாகனனை நயன்தாரா தயாரிப்பாளராக்கியிருக்கிறார். ஆம், கே.எஸ்.மயிவாகனன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்.
கூட இருப்பவர்களுக்கு கொடுத்து உதவி செய்வதோடு, அவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நயன்தாராவின் நல்ல மனசுக்காக, அவரால் உயர்ந்தவர்கள் விரைவில் அவருக்கு கோவில் கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரது நல்ல மனசைப் போல விக்னேஷ் சிவனுக்கும் கூட இருப்பவர்களை உயரத்தில் உட்கார வைக்க வேண்டும், என்ற மனசு இருப்பதால் தான், இந்த இரண்டு மனசுகளும் தற்போது ஒரே மனசாகியிருக்கிறது போல.
‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...