’கயல் சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ வரும் செப்டம்பர் 27 அம தேதி வெளியாகிறது. டூ மூவி ஃபப்ஸ் (Two Movie Buff's) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.டி.சி (SDC) தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பையை ஒரு கூட்டம் திருட நினைக்கிறது. அவர்கள் போடும் திட்டமும், அதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு பக்கம் இருக்க, அவர்கள் கோப்பையை திருடினார்களா இல்லையா, என்பதை இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும் வகையில் இப்படத்தை சுதர் இயக்கியிருக்கிறாராம்.
காட்சிக்கு காட்சி புதுமையாக இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கும் இயக்குநர், இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வேறு எந்த படத்திலும், எந்த வடிவிலும் பார்த்திருக்க முடியாது, என்று அடித்துக்கூறுகிறார்.
இப்படத்திற்காக மியூசியம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்களாம். அது சேட் என்று தெரியாத வகையில் கலை இயக்குநர் வடிவமைத்திருக்கிறாராம். அதேபோல் ஒளிப்பதிவாளர் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளாராம்.
மொத்தத்தில், வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக உருவாகியிருப்பதாக கூறும் இயக்குநர் சுதிர், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ரசிகர்கள் கூட்டத்தை நிச்சயம் கவரும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...