ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்!
Tuesday September-17 2019

தொடர்ந்து வெற்றிப் படங்களிலும், விருது படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை தொடர்ந்து தனது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்கள்.

 

ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நீலகிரியில் தொடங்கியது. பிர்த்வி சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு இத்தாலி நாட்டை சேர்ந்த ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்கிறார். மோகன் கலையை நிர்மாணிக்க, ஜெயலஷ்மி சுந்தரேசன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். தாமஸ் குரியன் ஒலி வடிவமைப்பை கவனிக்கிறார்.

 

Stone Bench 4th movie

 

மர்மம் திகில் மற்றும் திரில்லர் ஜானர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

5632

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery