அட்லியால் அப்செட்டான விஜய்! - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை
Tuesday September-17 2019

விஜயின் ‘பிகில்’ படம் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், அனைத்தும் வதந்தி தான். படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும், என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரியும் வகையிலான தேதியில் ரிலீஸ் செய்யப்படும், என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

இதற்கிடையே, வரும் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழா முடிந்ததும் விஜய் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தோடு வெளிநாடு செல்கிறார். சுமார் 10 நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்புகிறவர், அதன் பிறகு அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில், ‘பிகில்’ படத்தின் முக்கியமான காட்சியையே அட்லி எடுக்காமல் விட்டுவிட்டார் என்ற தகவலும் உலா வர தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து டப்பிங் பணிகளும் முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், படத்தில் விஜயின் ஓபனிங் காட்சியையே அட்லி தனது கவனக்குறைவால் படமாக்கவில்லையாம். அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதால் படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரம் பரிசும் வழங்கிவிட்டார்.

 

ஆனால், ஓபனிங் காட்சி எடுக்காமல் போனது குறித்து விஜயிடம் சொல்ல, ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம். என்னதான் அப்செட்டானலும் அந்த காட்சியில் தடித்து தானே ஆக வேண்டும். எனவே, அந்த காட்சியை அவசர அவசரமாக படமாக்க, விஜயும் அதில் கலந்துக்கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related News

5633

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery