பிக் பாஸ் அன்சீன் வீடியோ! - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்
Tuesday September-17 2019

பிக் பாஸ் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இன்றுடன் 86 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்னும் 14 நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கு நேரடியாக ஒருவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க்குகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன. இதில் போட்டியாளர்கள் கடுமையாக செயல்பட்டு வருகிறார்கள்.

 

இதற்கிடையே, தனது அப்பா மற்றும் கமல்ஹாசனின் அறிவுரைப்படி லொஸ்லியா காதலை தவிர்த்துவிட்டு போட்டியில் கவனம் செலுத்தி வருவதோடு, முன்பை போல கவினிடம் பேசுவதில்லை. கவினும் அவரிடம் பேசவில்லை என்றாலும், சோகமான முகத்துடனயே சுற்றி வருகிறார்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ தொகுப்புகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதில் ஒரு எப்பிசோட்டில், பெற்றோர்களின் பேச்சை கேட்டு கவினிடம் பேசுவதை லொஸ்லியா தவிர்த்து வந்தாலும், கவின் அவரை விடாமல் துரத்துகிறார். பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் லொஸ்லியாவிடம் தனியாக பேச கவின் முயற்சி செய்ய, அப்போது முகேன் அங்கு இருப்பதை பார்த்துவிட்டு திரும்ப சென்றுவிடுகிறார்.

 

Kavin and Loslya

 

பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை, லொஸ்லியாவின் காதலில் ஜெயிக்க வேண்டும், என்று கவின் புல் பார்மில் இறங்கிவிட்டதை தான் இந்த வீடியோ காட்டுகிறது. அதே சமயம், லொஸ்லியாவை தொடர்ந்து தொந்தரவு செய்யும் கவினின் செயலால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பாகியிருக்கிறார்கள்.

Related News

5634

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery