அப்போ வடிவேலு, இப்போ வைரமுத்து! - தொடரும் சிங்கமுத்துவின் வில்லங்கம்
Wednesday September-18 2019

வடிவேலுவின் காமெடி காட்சிகளில் வரும் நடிகர்களில் ரொம்பவே முக்கியமானவர் சிங்கமுத்து. இவர் வடிவேலுடன் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் அன்லிமிடேட்டாக சிரிக்க வைக்க கூடியவை. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வடிவேலுக்கு காமெடி காட்சிகளை எழுதி கொடுத்து, அவருடன் நடித்து வந்த சிங்கமுத்துக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.

 

போலீஸ் புகார், நீதிமன்ற வழக்கு என இருந்தவர்கள் தற்போது வழக்குகளை வாபஸ் பெற்று சமாதனம் அடைந்தாலும், இனி இருவரும் ஒன்று சேர முடியாது, என்றும் கூறிவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு அவர் வழியில் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்க, சிங்கமுத்து தனது காமெடி திறமையால சில படங்களில் நடித்து அதே பர்பாமான்ஸை கொடுத்து வருகிறார்.

 

இதற்கிடையே, மீண்டும் ஒரு வடிவேலுவை உருவாக்கும் விதத்தில் பல காமெடி காட்சிகளை எழுதி வைத்திருப்பவர், அதில் எந்த நடிகர் நடித்தாலும், அவர் டாப்பில் போய்டுவார், என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

 

இத்துடன், இரண்டு படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதோடு பாடல்களையும் எழுதியிருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிங்கமுத்து, இனி வைரமுத்துக்கு நான் தான் போட்டி, என்று ஜாலியாக கூறியிருக்கிறார்.

 

ஆக, அப்போது வடிவேலு, இப்போ வைரமுத்து என்று சிங்கமுத்து தனது வில்லங்கத்தை தொடர ஆரம்பித்துவிட்டார்.

Related News

5636

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery