பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த ஆல்யா மானசாவுக்கு நேர்ந்த சோகம்!
Wednesday September-18 2019

‘ராஜா ராணி’ சீரியம் ஜோடிகளான சஞ்சயும், ஆல்யா மானசாவும் காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இவர்களுக்கு திருமணமான தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. இவர்கள் இருவரும் காதலிப்பதை அறிவித்த பிறகு, ‘ராஜா ராணி’ சீரியலின் ரீச் அதிகமானது.

 

சுமார் இரண்டு வருடங்கள் ஒளிபரப்பான அந்த சீரியல் தற்போது முடிந்திருக்கும் நிலையில், இருவரும் வெவ்வேறு புதிய சீரியல்களில் நடிக்க இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், சஞ்சய் - ஆல்யா மானசாவின் காதலுக்கு சஞ்சய் வீட்டில் பச்சை கொடி காட்டினாலும், ஆல்யாவின் வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்களாம். ஆல்யாவும் எவ்வளவு பேசி பார்த்தும் அவர்கள் சம்மதிக்கவில்லையாம். இதையடுத்து சஞ்சயும் தனது பெற்றோருடன் சென்று ஆல்யாவை பெண் கேட்க, அதற்கும் அவர்கல் மசியவில்லையாம். இத்துடன், ஆல்யாவுக்கு மாப்பிள்ளை தேடுவதிலும் அவரது பெற்றோர் மும்முரம் காட்ட தொடங்கிவிட்டார்களாம்.

 

இதனால், சஞ்சயும், ஆல்யாவும் கடந்த மே மாதம் 27 ஆம் தேதியே பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டார்களாம். பிறகு திருமணம் நடந்தை கூறி ஆல்யா பெற்றோரிடம் சம்மதம் கேட்க, அப்போதும் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து சஞ்சய் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன், கடந்த ஜூலை மாதம் ஆல்யாவை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்.

 

Sanjay and Aalya Manasa

 

இப்படி பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட ஆல்யா மானாசா தற்போது பெரும் சோகத்தில் இருக்கிறாராம். காரணம், அவரது அம்மா தானாம். திருமணத்திற்கு பிறகு ஆல்யாவிடம் அவரது தந்தையும், சகோதரியும் பேசிக்கொண்டிருந்தாலும், அவரது அம்மா மட்டும் பேசுவதில்லையாம். இதனால், அவர் ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாக சஞ்சய் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

 

திருமணமான சில நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும், அம்மாவும் சமாதனமாகிவிடுவார், என்று நினைத்த ஆல்யா மானசா தற்போது பெரும் ஏமாற்றமடைந்துவிட்டாராம்.

Related News

5638

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery