Latest News :

விஷாலின் அதிரடிக்கு கிடைத்த வெற்றி - இணையத்தில் படத்தை வெளியிடும் அட்மின் கைது!
Tuesday September-12 2017

படம் வெளியான ஒரு சில மணி நேரங்களில், அபப்டங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டு வந்த தமிழ்கன் என்ற இணையதளத்தின் உரிமையாளர் சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இணையத்தில் புது படங்களை வெளியிடுபவர்களை விரைவில் கைது செய்வோம், அதற்கான் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

 

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டு வந்த நபரை கைது செய்துள்ளது. முதலில் இவர் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அது தமிழ்கன் அட்மின் என விளக்கம் அளித்துள்ளனர்.

 

அவரது பெயர் கௌரிஷங்கர் எனவும், இவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. திருட்டு டிவிடிக்கு எதிராக பெறப்பட்ட முதல் வெற்றி என்றும், விஷாலின் அதரடி நடவடிக்கைகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், திரைத்துறையினர் கூறி வருகிறார்கள்.

Related News

564

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery