தென்னிந்தியா முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தாலும், தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தான் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும், தற்போது ஒளிபரப்பாகும் மூன்றாவது சீசன் டாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் தான். அவர் போட்டியாளர்களை கையாள்வது, அவர்களுடைய தவறை கண்டிப்பதாகட்டும், அவர்களது திறமையை பாராட்டுவதாகட்டும் இரண்டையுமே ரசிகர்களை கவரக்கூடிய வகையில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 இன்னும் இரண்டு வாரங்களில் முடிய உள்ள நிலையில், 4 வது சீசனுக்கான பணிகளை விஜய் டிவி தற்போது தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், 4 வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கமாட்டார் என்றும் தெரிகிறது.
வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட உள்ள கமல்ஹாசன், புதிய டிவி சேனல் ஒன்றை தொடங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்த வேலைகள் காரணமாக அவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார், என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசனுக்கு பதிலாக சில நடிகர்கள் பெயர் பரிசீலனையில் இருக்கிறது. இதில் முக்கியமாக சூர்யாவின் பெயர் தான் ஸ்ட்ராங்காக அடிபடுவதாகவும் கூறப்படுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...