பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் பிணம்! - போலீஸ் விசாரணை
Saturday September-21 2019

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனாவுக்கு, தெலுங்கானா மாநிலம் பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது.

 

இதற்கிடையே நாகர்ஜுனாவின் மனைவி நடிகை அம்லா, சில வாரங்களுக்கு முன்பு அந்த இடத்தை பார்வையிட்டு, அதில் விவசாய வேலைகளை தொடங்கினார். பண்ணையாட்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷெட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் சென்று பார்த்த போது, அந்த ஷெட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.

 

Nagarjuna Land

 

அந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோத்னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த நபர் இறந்து 6 மாதத்துக்கு மேல் இருக்கலாம், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கும் போலீசார், நாகர்ஜுனாவின் குடும்படத்தாரிடமும் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

5646

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery