நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்! - லேட்டஸ்ட் அப்டேட்
Saturday September-21 2019

நடிகை நயன்தாரா சில காதல் தோல்விகளுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது இருவரும் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

அதே சமயம், விக்னேஷ் சிவனின் குடும்பத்தார் நயன்தாராவிடம் திருமணம் குறித்து அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் குழப்பமான மனநிலையில் இருக்கும் நயன்தாரா திருமணம் பற்றி தெளிவான முடிவு எடுக்காமல் இருந்தார். ஆனால், விக்னேஷ் சிவன் தரப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்களாம்.

 

இந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய நயன் தாரா, அந்த நாளிலேயே திருமணம் பற்றி முடிவையும் எடுத்துவிட்டாராம். அன்று இரவு விக்னேஷ் சிவனின் குடும்பத்தாருக்கு விருந்து கொடுத்த நயன்தாரா, டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்வதாக கூறிவிட்டாராம்.

 

கிறிஸ்துமஸ் மாதமான டிசம்பரில் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விக்னேஷ் சிவன் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதே போல், நயன்தாரா - விக்னேஷ் சிவன், எளிமையான முறையில் வெளிநாட்டில் கிறிஸ்த்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

5647

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery