பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறிய பிறகு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் ஏதும் இல்லாமல், நாட்கள் கடந்த நிலையில், பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் கவனம் செலுத்தினார்கள். இதில் சிறப்பாக செயல்படும் ஒரு போடிட்யாளர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டதால் போட்டியாளர்களிடம் கடுமையான போட்டி ஏற்பட்டது.
இதற்கிடையே, டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் ஈடுபட்ட போது தெரியாமல் நடந்த சில தவறுகளால் போட்டியாளர்களிடம் மோதல் ஏற்பட்டது. இதனால், கவின் மற்றும் சாண்டி இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது.
இந்த நிலையில், கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டவரை இறுதிப் போட்டிக்கு பிக் பாஸ் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த போட்டியாலர் தர்ஷன் என்று கூறப்படுகிறது. டாஸ்க்குகளில் எந்தவித பிரச்சினையும் செய்யாமல் ஈடுபட்ட தர்ஷன், சிறப்பாக செயல்பட்டதோடு, அனைத்தையும் போட்டி குணத்தோடு மட்டும் பார்க்காமல் ஜாலியான விளையாட்டாகவும் பார்த்ததால், அவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...