கடந்த ஒரு வாரமாக பிக் பாஸில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து கோல்டன் டிக்கெட் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்ல இருக்கிறார். அவர் யார்? என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதற்கிடையே கோல்டன் டிக்கெட் தர்ஷனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், போட்டிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பாயிண்டுகள் மூலம் முகேனுக்கு தான் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருப்பதாக இன்று மதியம் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. எப்படி இருந்தாலும் தர்ஷன் அல்லது முகேன் இருவரில் ஒருவருக்கு தான் கோல்டன் டிக்கெட் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் கமல்ஹாசன், டாஸ்க்குகளின் போது போட்டியாளர்கள் நடந்துக் கொண்ட விதம் குறித்து பேசுகிறார். அதில் அவர் கவினின் நடவடிக்கை குறித்து சூசகமாக கண்டிப்பவர், டாஸ்க்குகளில் கவின் தனது காதல் லீலையை காண்பித்ததை சுட்டிக்காட்டி வெளித்து வாங்குகிறார்.
கமலின் கண்டனத்திற்கு அதில் அளிக்கும் கவின், ”லொஸ்லியாவை சாண்டி கீழே தள்ளிய போது, எனக்கே தெரியாமல் என்னுள் கோபம் வந்துவிட்டது, நண்பர்களுக்கு எதாவது நடந்தால் எனக்கு அதுபோல வருகிறது” என்று கூறுகிறார். அதற்கு கமல்ஹாசன், “தர்ஷனுக்கு கையில் அடிபட்ட போது அந்த உணர்வு ஏன் உங்களுக்கு வரவில்லை?” என்று கேள்வி எழுப்ப அரங்கமே சிரிப்பால் அதிர்ந்து போகிறது.
மொத்தத்தில், இன்றைய எப்பிசோட்டில் கமலிடம் வசமாக சிக்கிய கவின், நொந்து நூடுல்ஸ் ஆகப்போவது உறுதி.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...