கடந்த மாதம் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் படத்தின் வசூல் பட்டையை கிளப்புகிறது.
பல சாதனைகளை நிகழ்த்திய ‘பாகுபலி’-யின் சாதனையையே விவேகம் முறியடித்து தொடர்ந்து வசூலை வாரிகுவித்து வந்ததற்கு அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய காரணம். எதிர்மறையான விமர்சனங்கள் வந்தும் ஒரு படம் வசூலில் இப்படி சாதனை புரிந்தது என்றால் அது விவேகம் மட்டும் தான் என்றும், அந்த பெருமை அஜித்தையே சேறும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், விரைவில் விவேகம் மூலம் அஜித் உலக சாதனை படைக்க உள்ளார். அதாவது விவேகம் படத்தின் டீசரை யூடியுபில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருப்பதோடு, 5,54,000 லைக்குகளும் கிடைத்துள்ளது. இன்னும் 17000 லைக்குகள் பெற்றால், உலக அளவில் அதிக லைக்குகள் பெற்ற வீடியோ என்ற சாதனையை விவேகம் பெற்றுவிடும்.
அஜித்தின் இந்த உலக சாதனைக்கு தேவையான 17000 லைக்குகள் எல்லாம் ரொம்ப சாதாரணமானது என்று கூறும் அவரது ரசிகர்கள் தலையை உலக சாதனைப்புரிய வைப்போம் என்று கூறுவதால், அஜித் உலக அளவில் நாயகனாகப் போவது உறுதி.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...