பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்து வருகிறார். அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என இரண்டு படங்களை தயாரித்திருக்கிறார். இதில் விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதால், இவருக்கு விஸ்வாசம் படத்தை அஜித் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பெரும் லாபத்தையும் ஈட்டுக்கொடுத்திருக்கிறது.
தற்போது தனுஷை வைத்து ‘பட்டாஸ்’ மற்றும் தலைப்பு வைக்கப்படாத ஒரு படம் என இரண்டு படங்களை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், ’விவேகம்’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக சத்யஜோதி தியாகராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம், சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...