கடந்த சில வாரங்களாக லொஸ்லியா, கவின் காதல் விவகாரம் பிக் பாஸ் வீட்டில் அனல் பறந்த நிலையில், தற்போது டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் கவனம் செலுத்தி வந்தார்கள். அதிலும், கவின் தனது காதல் லீலைகளை காண்பித்தது ரசிகர்களை மட்டும் இன்றி பிக் பாஸையே கடுப்பேற்றி விட்டது.
இந்த நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட இருப்பதும், அவர் சேரன் என்பதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஆனால், இதில் யாரும் எதிர்ப்பார்க்காத, அதே சமயம் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் லொஸ்லியா மற்றும் சேரன் இருவரையும் பிக் பாஸ் வெளியேற்றியிருக்கிறார்.
ஆனால், அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்களா? என்பது முழுமையாக தெரியவில்லை. அதேபோல், இவர்களை சீக்ரெட் ரூமில் உட்கார வைக்க முடிவு செய்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி குழு, இந்த வாரம் கவினை வெளியேற்றப்போகிறது என்ற ஒரு தகவல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் வெளியாகியிருக்கிறது.
எது உண்மை என்பது இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் முடிவில் தான் தெரியும்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...