Latest News :

ரஜினி சாதனையை முறியடித்த சூர்யா! - உற்சாகத்தில் ரசிகர்கள்
Monday September-23 2019

சூர்யா - இயக்குநர் கே.வி.ஆனந்த் கூட்டணியின் 3வது படமாக வெளியாகியிருக்கும் ‘காப்பான்’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது நடக்கும் சர்வதேச அரசியலைப் பற்றி படம் பேசியிருந்தாலும், அதை சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

 

கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான ‘காப்பான்’ தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தற்போது சூர்யா ரசிகர்களையும் ஒரு தகவல் உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Kaappaan Theater

 

உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாகியுள்ள ‘காப்பான்’ ஐக்கிய அரபு அமீரகத்திலும் கடந்த 20 ஆம் தேதி வெளியானது. அங்கு வெளியான முதல் நாளில் ரூ.2.2 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் ‘காப்பான்’ முதலிடத்தையும் பெற்றிருக்கிறதாம்.

 

இதற்கு முன்பு ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் தான் ரூ.2.1 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த நிலையில், அதை சூர்யாவின் ‘காப்பான்’ முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Related News

5653

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery