தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 91 நாட்களை கடந்திருக்கும் இப்போட்டியின் வெற்றியாளர் யார்? என்பது இன்னும் 9 நாட்களில் தெரிந்துவிடும்.
இதற்கிடையே, நேற்றைய எப்பிசோட்டில் லொஸ்லியா மற்றும் சேரன் ஒன்றாக வெளியேற்றப்படுவது போல காட்டிய பிக் பாஸ் குழுவினர், இறுதியில் சேரனை மட்டுமே வெளியேற்றினார்கள். சேரன் வெளியேற்றப்பட்ட தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், கூடவே லொஸ்லியாவை வெளியேற்றிய நாடகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
டாஸ்க்குகளில் சிறப்பான பர்பாமன்ஸ் செய்து கோல்டன் டிக்கெட் பெற்றிருக்கும் முகேன், இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், கவின், தர்ஷன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி ஆகியோரில் இரண்டு பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பல முறை எலிமினேஷன் பட்டியலில் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவோடு எஸ்கேப் ஆகி வரும் கவின், பல தவறுகளை செய்திருந்தாலும், நிகழ்ச்சிக்கு தேவையான கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளராகவும் அவர் இருப்பதால் அவரை இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், மற்றொரு இறுதிப் போட்டியாளராக தர்ஷன் அல்லது லொஸ்லியா இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இறுதியாக கவின், முகேன் மற்றும் லொஸ்லியா ஆகிய மூன்று பேர் தான் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...