’பிகில்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், விஜயும் வெளிநாடுக்கு சென்றுவிட்டார். இருப்பினும் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் அட்லீ கூறி வருகிறாராம்.
ஏற்கனவே விஜயின் அறிமுகக் காட்சி நினைத்தது போல வரவில்லை, என்று கூறிய அட்லீ விஜயிடம் இரண்டு நாட்கள் அனுமதி கேட்டு படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயின் அறிமுகக் காட்சிக்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடம்பெறுவது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். இதற்காக மதுரையில் உள்ள கல்லுரி ஒன்றை தேரு செய்த அட்லீ, இரண்டாயிரம் துணை நடிகர்களை வைத்து இந்த காட்சியை படமாக்க திட்டமிட்டாராம்.
ஆனால், இரண்டாயிரம் துணை நடிகர்கள், மதுரை படப்பிடிப்பு என்றால், செலவு அதிகமாகிவிடும் என்பதால், சென்னையிலேயே அந்த காட்சியை படமாக்கும்படி கூறிய தயாரிப்பு தரப்பு, பெரிய பள்ளியிடம் பேசி, அப்பள்ளி முழுவதும் வெள்ளையடித்து, வண்ணம் பூசி, படப்பிடிப்புக்கான அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்ததாம். ஆனால், இயக்குநர் அட்லீ அங்கு அந்த காட்சியை எடுக்க மாட்டேன், என்று மறுத்துவிட்டாராம்.
அட்லீயின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு தரப்பு விஜய்க்காக கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்க, அந்த காட்சியை படமாக்காமல் விட்டுவிடலாம், என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்களாம். ஆனால், அட்லீ தான் ரொம்பவே பிடிவாதமாக அந்த காட்சியை எடுத்தே தீருவேன், என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...