பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 94 நாட்களை எட்டியுள்ளது. நேற்று சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முன்னாள் போட்டியாளர்கள் மகத் மற்றும் யாஷிகா ஆனந்த், ஷெரீனை ஒரு கடிதம் எழுதம்படியும், அந்த கடிதம் ஒளிபரப்பு செய்யபடாது, என்றும் கூறினார்கள்.
இதனால், ஷெரீன் ஒரு காதல் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதத்தை தர்ஷன் படிக்க வேண்டும், என்று பிக் பாஸ் கூறியதால், அதிர்ச்சியடைந்த ஷெரீன் கதை கிழித்து போட்டுவிட்டார். இதனால் அவர் யாருக்கு, என்ன எழுதினார் என்பத் தெரியவில்லை.
இந்த நிலையில், ஷெரீன் தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுதியிருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இன்றி ஷெரீனின் கிழித்து போட்ட கடிதத்தின் துண்டுகளை எடுத்து தர்ஷன் ஒட்ட வைத்து படிக்க முயற்சிக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்களும் அதை படிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஷெரீன், “உனக்கு அந்த கடிதத்தை படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், என்னிடம் சொல்லியிருக்கலாம் நான் கொடுத்திருப்பேன், இல்லை வேறு எழுதி கொடுத்திருப்பேன், ஏன் இப்படி படுத்துற” என்று தர்ஷனிடம் கூறுகிறார்.
மேலும், சாண்டி வனிதா சொன்னது போல ஷெரீன் தர்ஷனை காதலிப்பதாக மறைமுகமாக சொல்கிறார். அதற்கு ஷெரீன் வெற்கப்படுவதோடு, தர்ஷானை காதலோடும் பார்க்கிறார்.
அதே சமயம், ஷெரீன் எழுதிய கடிதம் தர்ஷனுக்கு எழுதிய காதல் கடிதம் என்பது தெளிவாக கேமராவில் பதிவாகியிருப்பதால், அவர் தர்ஷனை காதலிப்பது கன்பார்மாகியுள்ளது. எனவே, இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே, தர்ஷனின் நடவடிக்கை பிடிக்காத அவரது காதலி சனம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காரணமாக அவர் தர்ஷனை பச்சை மிளகாய் சாப்பிட வைத்துவிட்டார் பிக் பாஸ் என்று கூறினாலும், ஷெரீனுக்காக அவர் பச்சை மிளகாய் சாப்பிட்டதாலயே சனம் கடுப்பாகியுள்ளதாக கூறப்படுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...