Latest News :

பிக் பாஸில் இருந்து கவின் வெளியேறினாரா? - புகைப்படம் சொல்லும் சீக்ரெட்
Thursday September-26 2019

பிக் பாஸ் வீட்டின் முக்கிய போட்டியாளராக திகழும் கவின், நேற்று ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேற முடிவு செய்த புரோமோ வெளியானவுடன் அவரது ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். அதுமட்டும் இன்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் பேக்டரியாக விளங்கும் கவின், எது செய்தாலும் அவரை இறுதிப் சுற்று வரை அழைத்துச் செல்வது விஜய் டிவி-யின் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாகும்.

 

இதற்கிடையே, நேற்று கவின் 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வெளியேற முயன்றதால், அவர் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனார். அவருக்கு குடும்ப பிரச்சினை இருப்பதாகவும், அதனால் ஏற்கனவே சில முறை அவர் வெளியேற முயற்சித்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குழு அதற்கு அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது 5 லட்சம் ரூபாய் டாஸ்க்கில் யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் கவின், கிளம்ப முயன்றது பிக் பாஸ் குழுவினரே எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருந்தாலும் அதுவும் நிகழ்ச்சியின் பரபரப்புக்கு உதவியாக இருந்தது.

 

தற்போது ரசிகர்களின் ஒரே கேள்வி கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா, இல்லையா? என்பது தான். புரோமோவில் அவர் வெளியேறியது போல காட்டினாலும், அதை முழுமையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதே சமயம், கவின் வெளியேறுவது போல காட்டுவது அனைத்தும் வெறும் நாடகம் என்றும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கவின் 5 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிறும் புகைப்படம் ஒன்று வெளியாகியிறுக்கிறது. இதன் மூலம் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது உறுதியாகியுள்ளது.

 

Kavin

 

பிக் பாஸ் முடிய இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கவின் வெளியேறியிருப்பதால் இறுதிச் சுற்றுக்கு லொஸ்லியா மற்றும் தர்ஷன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

5666

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery