சினிமா பிரபலங்கள் டிவிட்டர் இனி வேண்டாம் என்று வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகை கஸ்தூரி ரொம்ப ஆக்டிவாக ட்விட்டரில் இயங்கி வருகிறார். சினிமா, அரசியல், சமூகம் என்று அனைத்து கருத்துக்களையும் தைரியமாக டிவீட்டி வரும் அவர், அவ்வபோது பல சர்ச்சையானவற்றையும் ட்வீட்டுகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குறித்து டிவிட்டரில் கஸ்தூரில் கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ட்வீட்டில், “பத்திரமாக இருங்க அமெரிக்கா. இது #NineEleven, இர்மா புயல், தற்போது #RGinUS(அமெரிக்காவில் ராகுல் காந்தி). பத்திரமாக இருங்க” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, டிவிட்டர் வேண்டாம் என்று அதில் இருந்து வெளியேறிய நிலையில், கஸ்தூரியின் இத்தகைய கலாய்ச்சலுக்கு பதில் அளிக்க மீண்டும் ட்வீட்டர் பக்கம் வருவாரா! என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொருத்திருந்து பார்ப்போம், கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி கொடுப்பாரா? என்று.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...