நடிப்பு மற்றும் அரசியல் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தின் வெளியீட்டில் சில சிக்கல்களாக இருப்பதாக கூறிய கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி பணம் வாங்கினார். அதற்கு பதிலாக அவர் தனது தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கூறினார். ஆனால், இதுவரை படமும் நடித்துக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை, என்று ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் நடிகர் கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...