தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ள நிலையில், முக்கிய போட்டியாளரான கவின், ரூ.5 லட்சம் பணத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லொஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்களில் ஏற்கனவே முகேன் இறுதி சுற்றுக்கு முனேறிய நிலையில், மற்ற இருவரில் கவின் ஒருவராக இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் ரூ.5 லட்சத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தயரானார். ஆனால், அது ஒரு நாடகம் என்றும் கவின் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவும், தனக்கு தற்போது உடனடியாக பண தேவை இருப்பதாலும் அவர் ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறியிருக்கிறார். கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் எப்பிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
மேலும், கவினை வெளியேற விடாமல் சக போட்டியாளர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர் அதை கேட்கவில்லை. அவரது காதலியான லொஸ்லியாவும் கவின் வெளியேற வேண்டாம் என்று கண்ணீர் விட்டு கேட்டும் அவர் மனம் இறங்கவில்லை. மூட்டை முடிச்சி கட்டிக்கொண்டு கவின் வெளியேறிய போது, லொஸ்லியா கதவு அருகே நின்று கதறி அழுத காட்சி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
இதோ அந்த காட்சி,
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...