பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில், முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கவின் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கவின் என்னதால் தவறு செய்தாலும், அவரை முதலிடத்திலேயே வைத்திருந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரீன், லொஸ்லியா, தர்ஷன், முகேன், சாண்டி ஆகியோரில் முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், மற்ற இருவரில் கவினும் ஒருவராக இருப்பார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென்று போட்டியில் இருந்து விலகியதற்கு காரணம், பணம் தான் என்று ஒரு தரப்பு கூறினாலும், இது நிகழ்ச்சியில் உள்ள ஸ்கிரிப்ட். இதை விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டது, என்றும் கூறுகிறார்கள்.
அதே சமயம், ஒரு நாளுக்கு ரூ.30 ஆயிரத்தை சம்பளமாக பெற்ற கவின், நிகழ்ச்சி முடிய இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்க, அந்த ஐந்து நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் மட்டுமே கிடைக்கும், ஆனால், அதைவிட அதிகமாக தற்போது 5 லட்சம் ரூபாய் கிடைக்க அதை எதற்காக விடவேண்டும், என்று நினைத்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது எல்லாமே வதந்தி தான். கவின் வெளியேறியது முழுக்க முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்களின் திட்டம் என்பதே உறுதியான தகவல். “உங்கள விட்டுட்டு நான் பின்னாடி இருப்பேனா, உங்கள காலி பண்ணிட்டு ஜெயிக்கப் போறேன் பாருங்க” என்று சாண்டி உள்ளிட்டவர்களில் சவால் விட்ட, கவின் 5 லட்சம் ரூபாய்க்காக வெளியேறும் ஆள் இல்லை. அதே சமயம், அவர் இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு சம்பளமாக ரூ.28 லட்சத்திற்கு மேல் கிடைக்க இருக்கிறது. ஒரு வேளை இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்றிருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் உள்ள நிலையில், அவர் வெளியேறிவிட்டார் என்றால் அது முழுக்க முழுக்க ஏற்கனவே செய்யப்பட்ட செட்டப் மட்டுமே.
இப்படி, நாடகமாகவும், போட்டியாளர்களை நடிகர்களாகவும் வைத்து நடைபெறும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும், அதில் பங்கேற்ற கவினும், அவரை நம்பிய ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...