கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் வரவேற்பு பெற்ற ‘ஜீவி’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாபு தமிழ் இயக்கும் தனது முதல் படத்திற்கு ‘க்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் யோகேஷ் ஹீரோவாக நடிக்க, குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குநர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.
ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அவினாஷ் கவாஸ்கர் இசையமைக்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, ஃபயர் கார்த்திக் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். கல்லை தேவா கலையை நிர்மாணிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. பெரும்பான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...