Latest News :

’தளபதி 64’ அறிவிப்பு! - ரசிகர்களை திசை திருப்பும் முயற்சியா?
Monday September-30 2019

விஜயின் 64 வது படமான ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி அது உறுதியும் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த தகவலை இன்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

இதற்கிடையே, விஜயின் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையாமல் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் பிகில் படப்பிடிப்பில் விஜய் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஏற்கனவே, ‘மெர்சல்’ படத்தில் இயக்குநர் அட்லீயின் அலட்சிய போக்கினால் தான் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகவும், அதனாப் படம் பெரிய வெற்றி பெற்றும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதாக பலர் குற்றம் சாட்டிய நிலையில், பிகில் படத்திலும் அதே தவறை இயக்குநர் அட்லி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஏஜிஎஸ் நிறுவனம் அட்லியின் மீது பெரும் கோபத்தில் இருந்தாலும், விஜய்க்காக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

 

இந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருக்கும் தகவல் வைரலாகி ரசிகர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே விஜயின் 64 வது படம் குறித்த அப்டேட் இன்று வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, பிகில் படத்திற்காக எடுக்க வேண்டிய காட்சிகள் மூன்று நாட்கள் படமாக்கப்பட உள்ளதால், இந்த மூன்று நாட்களும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை திசை திருப்புவதற்காக விஜயின் 64 வது படத்தின் அப்டேட்களை வெளியிடமும் விஜய் தரப்பு முடிவு செய்திருக்கிறார்களாம்.

Related News

5689

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery