விஜய் தேவரகொண்டா நடிப்பில், சந்தீப் வாங்கா இயக்கத்தில் வெளியாகியுள்ள தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் சர்வதேச அளவில் ரூ.50 கோடியை வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள அர்ஜுன் ரெட்டி தயாரிப்பாளர், படத்தின் ரீமேக் உரிமையை இன்னும் யாருக்கும் விற்கவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தின் இந்தி ரீமேக் குறித்து முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் பேசி வருவதாகவும், அப்படி அந்த நிறுவனம் இந்தியில் ரீமேக் செய்தால், அதையும் சந்தீப் வாங்காவே இயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் தமிழில் ரீமேக் உரிமையை விற்பது குறித்து பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ள அர்ஜுன் ரெட்டி குழுவினர், யாரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்பது சொல்ல மறுத்துவிட்டனர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...