பிக் பாஸ் சீசன் 3 இன்று 100 வது நாளை நிறைவு செய்தாலும் வெற்றியாளர் யார்? என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தான் தெரியும்.
இதற்கிடையே, பழைய போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வனிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். வனிதா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாலே ஏதோ பரபரப்பு காத்திருக்கிறது என்பது நிச்சயம். அதேபோல், அவர் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டை ரனகளப்படுத்துகிறார்.
அதாவது, தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ஷெரீனின் காதல் தான் காரணம், என்று அவர் கூறுகிறார். ஏற்கனவே இந்த விஷயத்தில் அவர் ஷெரீனை நோகடித்து நுங்கு சாப்பிட வைத்த நிலையில், மீண்டும் இதே விஷயத்தை இன்று பேசி ஷெரீனை கடுப்பேற்றுகிறார்.
வனிதாவின் இந்த பேச்சுக்கு பதில் ஏதும் பேசாமல் ஷெரீன் அழுதாலும், வனிதாவுக்கு சாக்ஷி எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நீ சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றும் கூறுகிறார்.
இதனால், அமைதியாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று ரனகளமாகவது உறுதி என்பது தெரிகிறது.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...