ஓவியா இல்லாத குறையை எப்படி எப்படியோ தீர்க்க நினைத்த பிக் பாஸ், தற்போது டாஸ்க் மூலமாக போட்டியை விறுவிறுப்பு அடையச்செய்துள்ளார்.
அதன் மூலம் நேற்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் படி, சிறிய கார்க்குள் அனைவரும் தங்க வேண்டும் என்று கூறப்பட்டது. யார் அதிக நேரம் தாக்குபிடித்து இருக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள் என்பது தான் போட்டியின் விதிமுறை.
இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறிக் கொண்டதோடு நேற்றைய போட்டி முடிவடைந்தது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் காரில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற, சுஜா வாருணி மற்றும் சினேகன், வெற்றிக்காக நேற்று இரவு முழுவதும் காருக்குள்ளே இருக்கிறார்கள். உணவு, தண்ணீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நேற்று இரவு மட்டும் அல்ல, இன்று காலை, மாலையும் அந்த காருக்குள்ளே இருக்கிறார்கள்.
எப்படியாவது போட்டியில் வென்றாக வேண்டும் என்று சினேகனும், சுஜா வாருணியும் கடுமையாக மோதிக்கொள்ளும் நிலையில், காரில் ஒரு காலில் நிற்க வேண்டும் என்று டாஸ்க்கை பிக் பாஸ் கடினமாக்க, அதையும் இவர்கள் செய்து வர, சினேகன் ஒரு இரண்டு கால்களால் நின்று சுஜாவை ஏமாற்றுகிறார. உடனே சுஜா கணேஷ் வெங்கட்ராமனிடம் தெரிவிக்க, கணேஷ் சினேகன் இரண்டு கால்களில் நிற்பதை தவறு என்று சொல்ல, அவருடன் சினேகன் சண்டை போடுகிறார்.
இப்படியாக கடுமையான எப்பிசோட்டக ஒளிபரப்பாக இருக்கும் இன்றைய பிக் பாஸி டாஸ்க்கில் வெற்றி பெற்றது சுஜாவா அல்லது சினேகனா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...