வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ராதிகா, தொலைக்காட்சி தொடர்களிலும் தனக்கென்று தனி பாதை வகுத்து வலம் வந்தார். அவரது ‘சித்தி’ தொடர் தான், சீரியல்களுக்கான மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
சினிமா பாணியில் இரட்டை வேடங்களை புகுத்தி அசத்திய ராதிகா, தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் பல வெற்றி சீரியல்களை தயாரித்து நடித்து வந்தாலும், சமீபகாலமாக அவரது சீரியல்கள் அவ்வளவாக எடுபடவில்லை. இதனால், அவர் ஆரம்பித்து புதிய வரலாற்று சீரியலில் இருந்து பாதியில் விலகியவர், தான் மீண்டும் வருவேன், என்று மட்டும் சொல்லாமல் சொன்னார்.
இந்த நிலையில், ராதிகாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமான முறையில் ராதிகா தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.விஜயன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்...
நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...