Latest News :

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா! - டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்குகிறது
Thursday October-03 2019

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. 

 

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் ஆதரவோடு, இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இந்த ஆண்டுக்கான விழா 17 வது ஆண்டாக வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

இவ்விழாவின் போஸ்டர் மற்றும் லோகோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் தலைவர் கண்ணன், துணை தலைவர் இராமகிருஷ்ணன், பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், நடிகை ரோகினி, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

 

இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் இயக்குநர் நடிகர் பார்த்திபன், ரோகிணி, இயக்குநர்கள் சங்க செயலாளர்   தலைவர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள  திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது. 

 

உலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகியன பிரிவுகளில் படங்கள்  திரையிடப்படுகிறது. 

 

தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ.1 லட்சமாகவும் இருக்கும். 

Related News

5705

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery