கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நாளையுடன் முடிவடைகிறது. தற்போது போட்டியாளர்களாக ஷெரீன், லொஸ்லியா, முகேன், சாண்டி ஆகியோர் இருக்கும் நிலையில், இவர்களில் டைடிலை வெல்லப் போவது யார்? என்பது தான் ரசிகர்களின் தற்போதைய கேள்வி.
இந்த கேள்விக்கு நாளை இரவு முடிவு தெரிந்துவிடும் என்றாலும், விஜய் டிவி இன்றே பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் வாக்குகள் மற்றும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டது, வீட்டில் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் போட்டிகளில் பங்கேற்றது உள்ளிட்டவைகள் அடிப்படையில் வெற்றியாளரை விஜய் டிவி தேர்வு செய்திருக்கிறதாம்.
அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 3-யின் வெற்றியாளராக விஜய் டிவி முகேனை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம், முகேன் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்ததோடு, டாஸ்க்குகளிலும் சிறப்பாக செயல்பட்டாராம். அத்துடன் வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவரை வெற்றி பெற வைத்தால் சேனலுக்கு டி.ஆர்.பி-யும் அதிகரிக்கும் என்பதால் விஜய் டிவி முகேனை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், ஏறக்குறைய இதுவே நாளைய முடிவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...