ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து சென்னை திரும்பியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு முடிவடைந்தது தொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு தரப்பு, படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தர்பார் படப்பிடிப்பின் இறுதி நாளில், நயன்தாரா செய்த தில்லாலங்கடி வேலையால் ரஜினிகாந்த் செம அப்செட்டான தகவல் தான், தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
படத்தின் இறுதி நாளான நேற்று முன் தினம் இயக்குநர் முருகதாஸ், ரஜினிகாந்த் உளிட்ட அனைவரும் காலை 6 மணிக்கே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகிவிட்டார்களாம். ஆனால், நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங்காம். என்னவென்று முருகதாஸ் விசாரிக்கையில், தனது சம்பள தொகையில் சில லட்சங்கள் பேலன்ஸ் இருப்பதாகவும், அந்த தொகை கைக்கு வந்தால் தான், படப்பிடிப்பு வருவேன், என்று நயன் அடம்பிடித்துக் கொண்டிருக்கிருந்தாராம்.
விஷயத்தை அறிந்த முருகதாஸ் நயன்தாராவை நேரடியாக தொடர்பு கொண்டு, எவ்வளவோ சமரசம் செய்தும் அதை கேட்காமல் ஓட்டல் அறையில் இருந்து நயன்தாரா கிளம்பவே இல்லையாம்.
இதற்கிடையே, நயன்தாராவுக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்தும் ஒரு கட்டத்தில் கடுப்பாகி அப்செட்டாகிவிட்டாராம். நிலைமையை புரிந்துக்கொண்ட முருகதாஸ், நேரடியாக ஓட்டலுக்கே சென்று நயன்தாராவை சமரசம் செய்தாராம்.
இன்று மதிய உணவு இடைவேளையின் போது, பேலன்ஸ் தொகை வந்துவிடும், அப்படி இல்லை என்றால் அந்த பணத்திற்கு தான் பொறுப்பு, என்று முருகதாஸ் உத்தரவாதம் கொடுத்த பிறகே நயன்தாரா படப்பிடிப்புக்கு வந்தாராம்.
பிறகு, முருகதாஸ் சொன்னபடியே மதியம் உணவு இடைவேளையின் போது லைகா நிறுவனம் நயனுக்கு சேரவேண்டிய தொகையை செட்டில் செய்ததாம். மேலும், காந்தி ஜெயந்தியன்று வங்கி விடுமுறை என்பதால், பணம் எடுப்பதற்கு தாமதமாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
அதே சமயம், சில லட்சங்களுக்காக தங்களது நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், படப்பிடிப்பு குழுவினருக்கு தெரியும் வகையில் நயன்தாரா நடந்துக்கொண்டது தங்களை ரொம்பவே தர்மசங்கடப் படுத்திவிட்டதாக கூறி, கவலையை வெளிப்படுத்திய லைகா நிறுவனம், நயன் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...