Latest News :

போலியான அறிவிப்புகள்! - யோகி பாபு பெயரில் நடக்கும் மோசடி
Saturday October-05 2019

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகி பாபு, ‘கூர்கா’, ‘தரமபிரபு’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ‘பட்லர் பாபு’ என்ற படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிப்பதாகவும், அவர் நடிக்கும் காமெடி காட்சிகளின் வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் எழுதி கொடுப்பதாகவும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

 

ஆனால், இவை இரண்டையுமே மறுத்திருக்கும் யோகி பாபு, தனது பெயரில் மோசடி நடப்பதாக கூறியிருக்கிறார்.

 

இது குறித்து யோகி பாபு அளித்திருக்கும் விளக்கத்தில், “’தர்மபிரபு’, ’கூர்கா’ என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக  எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள்  மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. 

 

மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

5710

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery