வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நான்காவது படம் ‘அசுரன்’. இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியார் நடித்திருக்க, பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
நேற்று உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களிலும் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
மேலும், கர்நாடகாவில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 5 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலி, தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களிலும் திரையரங்கங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது ரஜினிகான்ந்த், விஜய், அஜித் ஆகியோருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில், தற்போது தனுஷுக்கும் அது சாத்தியமாகியுள்ளது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...