விஜயின் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அத்தனை விளம்பரங்களிலும் அறிவித்து வந்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, இன்று (அக்.7) டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக டிரைலர் ரிலீஸ் தேதியையே அவர் இன்று அறிவித்துள்ளார்.
இது விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை செய்தியாக இருப்பதைவிட அல்வா செய்தியாக இருப்பதாகவே கருதப்படுகிறது. காரணம், பிகில் படம் தொடர்பாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில், இதுவரை எந்தவிதமான அப்டேட்களும் முழுமையாக தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை. இதற்கு காரணம் இயக்குநர் அட்லீயின் அஜாக்கிரதை என்று தயாரிப்பு தரப்பில் மறைமுகமாக குற்றம் சாட்டப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், பிகில் படம் தீபாவளிக்கு வெளியாவதே சந்தேகம் தான், என்று பலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிகில் படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கும் அர்ச்சனா கல்பாத்தி, அதே விளம்பரத்தில் தீபாவளி ரிலீஸ் என்பதை நீக்கியிருக்கிறார். மறைமுகமாக “போட்றா வெடிய” என்று மட்டும் பதிவிட்டிருப்பவர், வெளிப்படையாக படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை அறிவிக்கவில்லை.
படம் சென்சார் முடிந்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, சென்சாரிலேயே பிகிலுக்கு சங்கு ஊதப்படும், என்றும் சில தகவல்கள் பரவி வருவதால், தயாரிப்பு தரப்பு படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பிகில் படம் தற்போது உச்சக்கட்ட பரபரப்புக்கு சென்றுள்ளது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...