Latest News :

நடிகர் எம்.ஆர்.ராதாவின் பாணியை பின்பற்றும் அறிமுக ஹீரோ!
Wednesday October-09 2019

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரித்திருக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’. அறிமுக இயக்குநர் டிஸ்னி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆதிக்பாபு ஹீரோவாக அறிமுகமாகிறார். அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், அருள் டி.சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

 

கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.பி.அஹமது படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ஆதிக்பாபு, முதலில் சிறு வேடம் ஒன்றில் நடிக்கவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிறகு, இயக்குநட் டிஸ்னி, ஆதிக்பாபுவின் நடிப்பை பார்த்துவிட்டு, தனது கதைக்கான ஹீரோ இப்படி தான் இருக்க வேண்டும், என்று கூறி அவரையே ஹீரோவாக்கியிருக்கிறார்.

 

கட்டடக்கலை பொறியாளரான ஆதிக்பாபு, கடந்த 8 வருடங்களாக சினிமா வாய்ப்பு தேடி வந்த நிலையில், அவரது நடிப்பு திறமைக்காக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அவரும் நன்றாக பயன்படுத்திக் கொண்டாராம். படப்பிடிப்பில் பல முறை அவரது நடிப்புக்கு சுற்றியிருந்தவர்கள் கைதட்டியிருப்பதோடு, படத்தை பார்த்த பலரும், முதல் படம் போல அல்லாமல், பல படங்களில் நடித்த அனுபவமுள்ள நடிகரைப் போல நடித்திருக்கிறார், என்று பாராட்டியுள்ளார்கள்.

 

Kutram Purinthaal

 

முதல் படத்தை முடித்துவிட்டு, அடுத்தப் படங்களுக்கான கதை தேர்வில் இருக்கும் ஆதிக்பாபு, ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்று இல்லாமல், நல்ல வேடம் கிடைத்தால் ஒரு காட்சியில் கூட நடிப்பேன், என்று கூறுபவர், நெடிகட்டிவான வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறார்.

 

மேலும், எம்.ஆர்.ராதாவை போல வித்தியாசமான வேடங்களில், ஆண்டி ஹீரோவாக குறிப்பாக அவரது ‘இரத்த கண்ணீர்’ போன்ற படங்களில் நடிக்க வேண்டும், என்று தனது ஆசையை வெளிப்படுத்துபவர், விஜய் ஆண்டனி, பகத் பாசில் போன்றவர்கள் நடிக்கும் ஜானர் படங்களும் தனக்கு செட்டாகும் என்று கூறுபவர், அதுபோன்ற கதைகளையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Related News

5722

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery