கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களாக பங்கேற்ற நடன இயக்குநர் சாண்டி மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த தர்ஷனை நடிகர் சிம்பு சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ள சிம்பு, ரசிகர்களை சந்திப்பேன் என்று அறிவித்துவிட்டு இதுவரை சந்திக்கவில்லை. ஆனால், பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டும் அழைத்து சந்தித்து பாராட்டியதோடு, அவர்களுக்கு சில புத்தகங்களையும் பரிசாக வழங்கியுள்ளார்.
ஏற்கனவே, பிக் பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், ஹரிஷ் கல்யாண் ஆகியோரையும் சிம்பு சந்தித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...