Latest News :

’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Wednesday October-09 2019

இயக்குநர் பா. இரஞ்சித்தின்   நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து  வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. 

 

தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை  இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு, கலை இயக்குநராக  த.இராமலிங்கம், எடிட்டர் செல்வா, பாடல்கள், உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

 

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான ’பரியேறும் பெருமாள்’ படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை’பெற்றிருந்தது, இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. 

 

ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக கூறும் இயக்குநர் அதியன் ஆதிரை, படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Related News

5725

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery