‘கும்கி’ படம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன், தொடர்ந்து நடித்த ‘சுந்தரப்பாண்டியன்’, ’குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ படங்கள் வெற்றி பெற்றதால் அவர் ராசியான நடிகை என்று பெயர் எடுத்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
இதற்கிடையே, லட்சுமி மேனனுக்கு கிராமத்து கதாபாத்திரங்கள் மட்டுமே சூட்டாகும், என்ற இமேஜ் உருவானதோடு, அவர் நடித்த நகரம் சார்ந்த படங்கள் சரியாக போகாததால், அவருக்கு தொடர்ந்து கிராமத்து வேடங்களே கிடைத்தன. இதனால், கடுப்பானவர் தன்னால் அனைத்து வேடங்களிலும் நடிக்க முடியும், என்பதை நிரூபிக்க கூடிய வாய்ப்புகளுக்காக காத்திருக்க, அவரது உடல் எடை அதிகரிக்க தொடங்கியது.
மேலும், கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தியவர், படிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் பெரிதாக அமையவில்லை.
பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘யங் மங் சங்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் லட்சுமி மேனனுக்கு, தற்போது எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததால் அவர் கல்யாணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவரது பெற்றோர் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...