சினிமாத்துறையில் பல்வேறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வரும் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ், ’ஆர்ட்டிக்கள் 370’ யை மையமாக வைத்து படம் ஒன்றை தயாரித்து இயக்குகிறார். பாபு கணேஷின் மகனும், பல சர்வதேச ஆணழகன் போட்டிகளில் பரிசுகளை வென்றவருமான ரிஷிகாந்த் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.
நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து 'காட்டுபுறா' திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ’வாசனை படம்’ படைத்த பெருமைக்குரிய பாபு கணேஷ், ’370’ படத்தின் மூலம் 40 நாட்கள் நடத்த வேண்டிய படப்பிடிப்பை 4 கேமராக்களைக் கொண்டு 2 நாட்களில் நடத்தி புதிய சாதனை படைக்க உள்ளார்.
ஜாக்குவார் தங்கம் மற்றும் குழுவினர் இப்படத்திற்காக இதுவரை தமிழ் திரைப்படங்களில் இடம்பெறாத பல அதிரடி ஆக்ஷன்களை அமைக்க உள்ளார்களாம்.
பாபு கணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் பாபு கணேஷ் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கான பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...